இலங்கை பிரதான செய்திகள்

முரசுமோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி முரசுமோட்டை அந்தோனியார் கோவிலுக்கு முன்றலில்  நிறுத்தி வைக்கப் பட்டிருந்த  உழவு இயந்திரத்தில் மோதுண்டு அதற்கு முன்னால் நிறுத்து வைக்கப் பட்டிருந்த  சிறிய ரக உழவு இயந்திரம் (லான் மாஸ்டர் ) மோதி ஒருவா் பலியாகி உள்ளார்

பலியானவர்  விஸ்வமடு புன்னைநிராவிப்  பகுதியைச் சேர்ந்த 63  வயதான முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த வாகனம்  இரண்டும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடங்கள் வாகனம் நிறுத்த வேண்டிய பகுதிக்கு வெளியே என தெரிவிக்கப் படுகின்றது

அத்துடன் சிறிய ரக உழவு இயந்திரத்தை  குறித்த சாரதி எடுத்துக்  கொண்டுதப்பிச் சென்றுள்ளதாக  காவல்துறை  தகவல்கள் தெரிவிக்கின்றன .  மேலும் விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.