இலங்கை

கொதித்து ஆறிய அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட நீரை பருகுமாறு கோரிக்கை


கொதித்து ஆறிய நீர் அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட நீர் என்பனவற்றை மட்டும் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுச் சுகாதார உத்தியோகத்தர் சங்கத்தினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நீரைப் பருகும் போது இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கியுள்ள வீடுகளை பயன்படுத்துவதற்கு முன்னதாக அவற்றை சுத்தப்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply