இந்தியா

இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், குஜராத் மாநிலத்தில்  கர்ப்பிணி உட்பட 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்ததை சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட 3 ஆய்வக சோதனைகள் உறுதிப்படுத்தி இருப்பதாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை  ஜிகா வைரஸ் பரவலை கண்டுபிடிக்கவும் அதைத் தடுக்கவும் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய  மத்திய சுகாதார அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது வரை சுமார் 50 ஆயிரம் பேருக்கு மேற்கொண்ட  பரிசோதனையில்  3 பேருக்கு மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் பாதிப்புக் குள்ளானவர்களுக்கு முதலில் லேசான காய்ச்சல் வரும் எனவும் பின்னர் தோலில் அரிப்பு, தடை மற்றும் மூட்டு வலி அல்லது தலைவலி ஏற்படுவதுடன்  இந்த அறிகுறிகள் 2 முதல் 7 நாட்களுக்கு இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸால் பாதிக் கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, சிறிய தலை, நரம்பு மண்டல பாதிப்புடன் குழந்தைகள் பிறக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர, மூளை பாதிப்பு, பார்வைக்குறைவு, காது கேளாமை உள்ளிட்ட பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply