இலங்கை பிரதான செய்திகள்

திருகோணமலையில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துக்குட்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் பாடசாலை மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்ததாக  தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராக மாணவர்கள் இன்று காலை  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மூதூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆரம்ப பாடசாலை மாணவிகள் மூவர் இரு இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில்   , சந்தேகநபர்கள் கிராம மக்களால் தாக்கப்பட்டு பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் குறித்த பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் இணைந்து இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.