மோரா என்ற சுறாவளிக் காற்று இலங்கையை கடந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வங்களா விரிகுடாவில் இந்த சுறாவளிக் காற்று உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை அண்டிய பகுதிகளில் மையம் கொண்டிருந்த சுறாவளிக் காற்று தற்போது பங்களாதேஸ் நோக்கி நகர்ந்துள்ளதாகவும் எனினும், இலங்கையில் தொடர்ந்தும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் மத்திய மலைநாட்டுப் பகுதியில் காற்றின் சீற்றம் அதிகளவில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Add Comment