புதிய அரசியல் சாசனம் அமைக்கும் முயற்சிக்கு அனைவரும் இணங்கியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த யோசனைத் திட்டத்திற்கு ஆதரவினை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் இந்த யோசனைத் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய விடுதி ஒன்றை அமைப்பதற்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா வைபவத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Add Comment