சீரற்ற காலநிலையினால் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மூன்றாவது கப்பல் இன்று (30) காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன் பொறுப்பேற்று, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்தினவிடம் கையளித்தார்
கப்பலில் வருகைதந்த மருத்துவர்கள் உள்ளிட்ட நிவாரணக்குழுவினரை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Spread the love
Add Comment