இலங்கை

நிவாரணங்களை வழங்கும் அரச அதிகாரிகள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை – எரான் விக்ரமரட்ன


நிவாரணங்களை வழங்கும் அரச அதிகாரிகள் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது சுற்று நிருபங்களை மீறிச் செயற்படுவதனால் ஆபத்து ஏற்படும் என ஒரு துளியும் அஞ்ச வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே முதன்மையானது எனவும் வாகனங்கள் கொள்வனவு செய்வது அவசியமற்றது எனவும் என  குறிப்பிட்டுள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply