இலங்கை

இலங்கையில் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு தென்கொரியா நிதி உதவி


இலங்கையில் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு தென்கொரியா நிதி உதவிகளை வழங்க உள்ளது. இலங்கையில் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 199 மில்லியன் அமெரிக்க டொலர்களை  கொரிய பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு நிதியத்தினால் இந்த உதவி வழங்கப்பட உள்ளது.

கண்டியில் சுரங்கப் பாதைகள் மற்றும் பாலங்களை அமைப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply