சீரற்ற காலநிலை அனர்த்தம் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு 2.5 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஒர் உயிரிழப்புக்கு தலா ஒரு லட்சம் ரூபா என்ற அடிப்படையில் நட்டஈடு வழங்கப்படும் எனவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை அனர்த்தம் காரணமாக வர்த்தக நிலையங்கள் மற்றுமு; தொழில் முயற்சிகளுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்ய 2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தம் காரணமாக 1402 வீடுகள் முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளதாகவும் மேலும் சுமார் ஏழாயிரம் வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment