விளையாட்டு

இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் தொடர்பில் சிரேஸ்ட வீரர்கள் அதிருப்தி


இந்திய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் அணில் கும்ப்ளே தொடர்பில் அணியின் சிரேஸ்ட வீரர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தலைமைப் பயிற்றுவிப்பாளர் மீதான நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக சிரேஸ்ட வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

அணியின் தலைவர் விராட் கோஹ்லி, கும்ப்ளேவின் பயிற்றுவிப்பு முறைமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் இது குறித்து இந்திய கிரிக்கட் வாரியத்திடம் அவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே இந்திய கிரிக்கட் வாரியம் தலைமைப் பயி;ற்றுவிப்பாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் விளம்பரம் செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது.  அணில் கும்ப்ளேவின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியிலேயே இந்திய அணி சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply