இலங்கை

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரியா உதவி


அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரியா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு கொரியா 300,000 அமெரிக் டொலர்களை உதவியாக வழங்க உள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுடன் துயரைப் பகிர்ந்து கொள்வதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கலை வெளியிட்டுக் கொள்வதாகவும் கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொரிய அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான கொரிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. கூடாரங்கள் உள்ளிட்ட பொருட்களுக்காக இவ்வாறு 300,000 டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன

Add Comment

Click here to post a comment

Leave a Reply