மண்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடைக்கால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் நோக்கில் பிரதமர், தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இதனால் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கையை பிரதமருக்கு அனுப்பி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்து இந்த அறிக்கையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த வாரம் விசேட பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment