இலங்கையின் வடமாகாணமும், மலையகத்தின் பல பகுதிகளிலும் இயற்கை அனர்த்தத்தில் அழியும் சாத்தியம் உள்ளதாக பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உடனடியாக மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டும் எனவும் அடுத்த சில காலத்தில் இலங்கை பாரிய அனர்த்தங்களுக்கு முகன்கொடுப்பதை தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.
பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை சுற்றாடல் பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்படாமையே இந்த அனர்த்தங்களுக்கு காரணம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Spread the love
Add Comment