விளையாட்டு

ஐ.சி.சி சம்பியன் கிண்ண போட்டியில் இன்று இலங்கை – தென் ஆபிரிக்க அணிகள் போட்டி

ஐ.சி.சி சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரில் இன்றைய தினம் இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் போட்டியிடுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் பிரித்தானிய நேரம்  காலை 10.30 மகிண்க்கு  இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணித்தலைவர் மத்தியூஸ் இன்றைய போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை என்பதனால் அவருக்கு பதிலாக உபுல் தரங்க அணித்தலைவர் பொறுப்பேற்றுள்ளார்.

அதேவேளை லசித் மலிங்க இன்றைய போட்டியில் களமிறங்குகின்றார். கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர்  லசித் மலிங்க  முதன்முறையாக இலங்கை அணியின் சார்பில் ஒருநாள் போட்டியில் களமிறங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.