விளையாட்டு

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் சென் கீட்ஸின் வொர்னர் பார்க் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுது;தாடியது. ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் ராசீட் கான் 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் சுனில் நரேன் 3 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மட்டும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் மார்லன் சமுவெல்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply