ஆறு மாத கால ஆயத்தங்களின் பின்னரே லெபனானில் தேர்தல் நடத்தப்பட முடியும் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் நொகாட் மச்நோ ( Nohad Machnouk) தெரிவித்துள்ளார்.
லெபனானில் புதிய தேர்தல் சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு முன்னதாக புதிய தேர்தல் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
லெபனானின் சபாநயகர் Nabih BerriI ஐ சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது உள்ளதுறை அமைச்சர் நொகாட் மச்நோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தேர்தல் சட்டம் தொடர்பில் பணியாளர்களை பழக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஏனைய உலக நாடுகளிடமிருந்து ஜனநாயகத்தை மேம்படுத்தும் முயற்சிக்கு, உதவிகள் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Spread the love
Add Comment