அரசாங்கம் புதிய உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.
இந்த உடன்படிக்கையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் சில திருத்தங்களைச் செய்து புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Add Comment