இலங்கை

இந்த அரசாங்கம் நாட்டை முன்னோக்கி நகர்த்தாது – விமல் வீரவன்ச


இந்த அரசாங்கம் நாட்டை முன்னோக்கி நகர்த்தப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். 2016ம் ஆண்டு நிதி அமைச்சின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து திருப்தி கொள்ள முடியாது என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் கடந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி இந்த அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் பாரியளவில் கடனைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பொய்யான தகவல்களை வெளியிடுவதனால் எதிர்காலத்தில் எமக்கு வெளிநாடுகள் உதவிகளை வழங்காது என எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாத அரசாங்கமொன்றே இன்று நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply