இலங்கை

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்


அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மண்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு மாத காலம் வரையில் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சாரசபைக்கு மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கியிருப்போருக்கும் இந்த உதவி வழங்கப்பட உள்ளதகத் தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்தம் காரணமாக மின்சார வசதி இழக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply