பளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் யாழில் நேற்று சனிக்கிழமை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞனின் வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினை சேர்ந்தவர்கள் இளைஞனை கைது செய்துள்ளனர்.
பளை பகுதியில் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி சுற்று காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது 4 தூப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போதிலும் பொலிஸார் எவருக்கும் காயம் ஏற்படாததுடன் பொலிஸாரின் வாகனத்திற்கும் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment