லண்டனில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் மிலேச்சத்தனமான தாக்குதல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் மக்களுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment