இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில் உள்ளதாக அண்மையில் சமூக ஊடக வலையமைப்புக்களில் தகவல்கள் வெளியாகியிருந்தது.
லங்கா சதொச நிறுவனத்தில் இந்த வகை அரிசி விற்பனை செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. புறக்கோட்டையில் கொள்வனவு செய்யப்பட்ட பாஸ்மதி அரிசி தொடர்பில் இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றின் தரம் சிறந்த முறையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சு லங்கா சதொச நிறவனத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது அமைச்சு தெரிவித்துள்ளது.
Spread the love
Add Comment