பிரதமர் முன்கூட்டியே நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவிற்கான சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இன்றைய தினம் வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்த உள்ளதுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமுத்திர மாநாட்டிலும்; கலந்து கொள்ள உள்ளார்.
உடல் நிலை தேறியுள்ளதனால் உத்தேசித்திருந்த தினத்திற்கு முன்னதாகவே ரணில் நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக பிரதமர் நாடு திரும்புவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிண் பண்டார தெரிவித்துள்ளார்.
Add Comment