Home இலங்கை வடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் மீதான ஊழல்கள் நிரூபணம். பதவி விலக வேண்டும் என விசாரணை குழு பரிந்துரை

வடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் மீதான ஊழல்கள் நிரூபணம். பதவி விலக வேண்டும் என விசாரணை குழு பரிந்துரை

by admin

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரணைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. மற்றைய இரு அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுகள் ஆதாரங்கள் இல்லாதமையால் நிரூபிக்கப்படவில்லை.

வடமாகாண சபையின் அமைச்சர்கள் மீதுஊழல் மோசடி  குற்றச்சாட்டுக்களை ஆளும் கட்சி உறுப்பினர்கள் முன் வைத்து வந்த நிலையில் அவற்றை விசாரணை செய்ய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசாரணை குழு ஒன்றினை கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் நியமித்தார். அக்குழுவில் ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­க­ளான எஸ்.தியா­கேந்­தி­ரன், எஸ்.பர­ம­ராஜா மற்­றும் ஓய்வு பெற்ற மாவட்­டச் செய­லர் செ.பத்­ம­நா­தன் ஆகி­யோர் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­னர்.
குறித்த விசாரணை குழு தனது பணியை கடந்த நவம்பர் மாதம் ஆரம்பித்தது. அக்குழுவின் விசாரணை அறிக்கை 82 பக்­கங்­க­ளைக் கொண்­டுள்­ளது. அது முழு­மை­யா­கத் தமிழ் மொழி­யில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணைக் குழு­வுக்கு வழங்­கப்­பட்ட ஆணை, விதி­முறை, அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட்­டுக் கள், கண்­ட­றி­வு­கள், பரிந்­து­ரை­கள் அல்­லது விதப்­பு­ரை­கள், நன்­றி­யுரை என்ற கட்­ட­மைப்­பில் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.குறித்த கண்­ட­றி­வு­கள், பரிந்­து­ரை­கள் பகு­தி­யில் அறிக்­கை­யில் முக்­கி­ய­மா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
விவசாய அமைச்சரின் மீதான குற்றசாட்டு. 

விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் மீது பல குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­டன. ஆளும் கட்சி உறுப்­பி­ன­ரான ஜி.ரி.லிங்­க­நா­தன், தன்­னு­டன் வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வு­டன் விசா­ர­ணைக் குழு­வி­டம் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர். அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னி­டம், தவ­ராசா குறுக்கு விசா­ரணை செய்­தி­ருந்­தார். அதி­கார வரம்பு மீறல், முறை­கே­டு­கள், நிதி மோசடி தொடர்­பில் குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­டன.

மூத்த இலங்கை நிர்­வாக சேவை அதி­கா­ரி­கள் இருக்­கின்ற நிலை­யில், இளை­ய­வ­ரான ம.பற்­றிக்­டி­றைஞ்­சன் இவ­ரது அமைச்­சின் செய­ல­ராக நிய­மிக்­கப்­பட்­டார். இது இவர் செய்­கின்ற மோசடியான  நட­வ­டிக்­கை­க­ளுக்கு இணங்­கிச் செயற்­ப­டு­வ­தற்­கா­கவே மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மரம்­ந­டுகை, பாதீ­னிய ஒழிப்பு, நீர் ஆய்வு விட­யங்­களை சுற்­றா­டல் அமைச்­சர் என்ற கோதா­வில் முன்­னெ­டுத்­துள்­ளார். சுற்­றுச்­சூ­ழல் விட­யம், 13ஆவது திருத்­தச் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் ஒருங்­கி­யைவு நிர­லில் உள்­ளது. இவற்றை கொழும்பு அர­சு­டன் சேர்ந்து திணைக்­க­ளம் உரு­வாக்கி மேற்­கொண்­டி­ருக்­க­வேண்­டும். அப்­ப­டி­யல்­லா­மல் அமைச்­சரை முன்­னி­லைப்­ப­டுத்­தியே இவ­ரது செயற்­திட்­டங்­கள் அமைந்­துள்­ளன.

இத்­த­கைய செயற்­றிட்­டங்­க­ளின் தொடக்க நிகழ்­வு­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார். அவரே இவற்றை இயக்­கு­வ­தான -, பின்­ன­ணி­யில் இருப்­ப­தான மாயை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் செயற்­பட்­டுள்­ளார். அதனை வைத்து தனது கைங்­க­ரி­யங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளார்.

இவ­ரது அமைச்­சுக்கு வழங்­கப்­பட்ட தண்­ணீர் பவு­சர்­களை, உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்கு வழங்­கா­மல் தனது கட்­டுப்­பாட்­டில் வைத்­துள்­ளார். விவ­சாய கிணறு புன­ர­மைப்பு, புழு­தி­யாற்று ஏற்று நீர்­பா­ச­னத் திட்­டங்­க­ளில் நிதி முறை­கே­டு­கள் இடம்­பெற்­றுள்­ளன.

வடக்கு மாகாண கூட்­டு­றவு ஆணை­யா­ள­ரா­கக் கட­மை­யாற்­றிய திரு­மதி மது­மதி வசந்­த­கு­மார், இவ­ரது அழுத்­தங்­கள் கார­ண­மா­கவே மாகாண சபை சேவையை விட்டு வெளி­யே­றி­னார் என்று விசா­ர­ணைக் குழு கண்­ட­றிந்­துள்­ளது. வட­ம­ராட்சி கிழக்கு கூட்­டு­ற­வுச் சங்­கத் தலை­வரை பதவி நீக்­கம் செய்­தமை உள்­ளிட்ட விட­யங்­க­ளில் அமைச்­சர் நேர­டி­யாக தலை­யீடு செய்து அழுத்­தங்­களை வழங்­கி­யுள்­ளார்.

இதே­போன்று யாழ்க்­கோ­வி­லும் தலை­யீடு செய்­துள்­ளார். இத­னால் விசா­ர­ணைக்­குழு விச­ன­ம­டை­கின்­றது. பிந்­திய செய்­தி­யாக, யாழ்கோ பணிப்­பா­ளர் சபை உறுப்­பி­னர்­கள் நிய­ம­னத்­தி­லும் அழுத்­தம் கொடுத்­துள்­ளார் என்று அறி­கின்­றோம். திணைக்­கள அதி­கா­ரி­கள் மிரட்­டப்­பட்டு சில நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

இவர் முன்­னெ­டுத்த தன்னை முதன்­மைப்­ப­டுத்­திய செயற்­திட்­டங்­க­ளால் மாகாண சபை நிதி வீண்­வி­ர­யம் செய்­யப்­பட்­டுள்­ளது. அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னும், அவ­ரது செய­லா­ள­ரு­மான பற்­றிக்­டி­றைஞ்­சன் ஆகி­யோர் பதவி விலக வேண்­டும். வடக்கு மாகாண சபையை வினைத்­தி­ற­னாக கொண்டு நடத்­து­வ­தற்கு எமது பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும்.

கல்வி அமைச்சரின் மீதான குற்றசாட்டு.

கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா கல்­விச் சேவைப் பின்­பு­லத்­தி­லி­ருந்து வந்­த­வர். வடக்­கின் கல்வி வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தது. இவ்­வா­றான சூழ­லில் கல்வி அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றார். இதன் பின்­ன­ரும் கல்­விப் புலத்­தில் முன்­னேற்­றம் ஏற்­ப­ட­வில்லை.

அமைச்­சர் குரு­கு­ல­ராசா அதி­கார முறை­கே­டு­க­ளில் ஈடு­பட்­டுள்­ளார். கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரின் அதி­கா­ரத்தை, அமைச்­சர் தனது கையில் எடுத்­துள்­ளார். இட­மாற்­றங்­க­ளின்­போது அர­சி­யல் செல்­வாக்­குச் செலுத்­தப்­பட்­டுள்­ளது. செய­லா­ள­ருக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரத்தை முறை­யற்ற விதத்­தில் அமைச்­சர் பயன்­ப­டுத்த வகை செய்­யும் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் சமர்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதில் செய­லா­ள­ரும் கையெ­ழுத்­திட்டு உடந்­தை­யாக இருந்­தி­ரு­கி­றார்.

இப்­ப­டி­யா­ன­தொரு அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் சமர்­பிக்­கப்­பட்­ட­போது தலை­மைச் செய­லா­ள­ரும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் இருந்­துள்­ளார். வடக்கு மாகாண சபை திற­னற்­றுச் செயற்­ப­டு­கின்­றது என்ற குற்­றச்­சாட்டு மக்­க­ளால் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதை ஆமோ­திப்­பது போன்று இது உள்­ளது.

மிக முக்­கி­ய­மாக, கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பாட­சா­லைச் சிறுமி ஒரு­வர் பாட­சாலை அதி­ப­ரால் பாலி­யல் வதைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார். சம்­ப­வம் குறித்­துக் குரல் எழுப்­பிய பாட­சாலை ஆசி­ரி­யரை, கிளி­நொச்சி வல­யக் கல்­விப் பணிப்­பா­ள­ரு­டன் இணைந்து, கல்வி அமைச்­சர் இட­மாற்­றம் செய்­துள்­ளார். இது மிக மோச­மான மன்­னிக்க முடி­யாத குற்­றம்.

எனவே கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராஜா உட­ன­டி­யா­கத் தனது அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டும். அத்­து­டன் கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரும் அந்­தப் பத­வி­லி­யி­ருந்து விலக வேண்­டும்.

சுகாதார மற்றும் மீன் பிடி அமைச்சர்களின் குற்றசாட்டு நிரூபிக்கப்படவில்லை.

சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் ஆதா­ர­பூர்­வமாக நிரூ­பிக்­கப்­ப­ட­ வில்லை. இத­னால் அவர் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்­தும் விடு­விக்­கப்படு­கின்­றார்.

அதே போன்று மீன்பிடி அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் மீது குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தி­ய­வர் கள், விசா­ர­ணைக்கு சமு­க­ம­ளிக்­க­வில்லை. எனி­னும் குற்­றச் சாட்­டுக்­கள் விசா­ரிக்­கப்­பட்­டன. ஆதா­ரங்கள் இல்­லா­த­தால் அவ­ரும் குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­கின்­றார். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேவேளை அமைச்­சர்­கள் மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­த­ரன், ச.சுகிர்­தன் இரு­வ­ரும் விசா­ர­ணைக் குழு­வின் முன்­பாக ஒரு தட­வை­கூட முன்­னி­லை­யாகி விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்.

கல்வி, பண்­பாட்­ட­லு­வல்­கள், விளை­யாட்டு மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சர் தம்­பி­ராசா குரு­கு­ல­ராசா மற்­றும் விவ­சா­ய­மும் கம­நல சேவை­க­ளும், கால்­நடை அபி­வி­ருத்தி, நீர்ப்­பா­சன, கூட்டுறவுத்துறைமற்­றும் சுற்­றா­டல் அமைச்­சர் பொன்­னுத்­துரை ஐங்­க­ர­நே­சன் ஆகி­யோ­ரையே பதவி வில­க­வேண்­டும் என்று அந்த அறிக்கை பரிந்­து­ரைத்­துள்­ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More