முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இணைக்கும் திட்டமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அடுத்தபடியாக தாமே சிரேஸ்ட உறுப்பினர் என குறிப்பிட்டுள்ள அவர் தமக்கு அறிவிக்காமல் அவ்வாறான ஓர் சந்திப்பினை நடத்தியிருக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment