இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியால் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியால் பணிப்பரிமாற்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளில் இவ்வாறு பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பண்டாரநாயக்க விமான நிலைய பணி முகாமையாளர் இதனை  அறிவித்துள்ளார். மறு அறிவித்தல் வரையில் கட்டார் ரியல்களை பணப்பரிமாற்றம் செய்ய வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அநேகமான உள்ளுர் வங்கிகள் சிங்கப்பூர் வங்கியொன்றுடன் கட்டார் ரியால்களை பரிமாற்றம் செய்வதாகவும், சிங்கப்பூர் வங்கியும் பணப் பரிமாற்றங்களை இடைநிறுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் கட்டாருக்கும் இலங்கைக்குமான விமான சேவைகளில் எவ்வித பாதிப்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.