இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும், சீன தூதுவர் ஷியன் லியானிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாலை இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டமைகாக ரவி கருணாநாயக்கவிற்கு, சீனத்தூதுவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சீன அரசாங்கம் இலங்கையின் வளர்ச்சிக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Add Comment