உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத மனிதாபிமானம் எம்மிடத்தில் உண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பௌத்த மத கொள்கைகளை பின்னணியாகக் கொண்டதனால் உலகின் வேறு எங்கும் இல்லாத கொடை மற்றும் மனிதாபிமான குணங்கள் இலங்கையில் செறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போது பல்வேறு தரப்பினர் மனமுவந்து உதவிகளை வழங்கியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Add Comment