இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பு பேணப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நேற்று மாலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் வலுவாக காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது துரித கதியில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு இந்திய பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment