கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது. சவூதி அரேபியா, பஹ்ரெய்ன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் கட்டார் பிரச்சினை குறித்து இலங்கையின் அமைச்சரவையில் பேசப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த விடயம் குறித்த விளக்கமளித்தார் என சுட்டிக்காட்டியுள்ள அவர் கட்டார் ரியாலை தடை செய்யும் நோக்கம் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment