இலங்கையில் சுனாமி அல்லது சூறாவளி அனர்த்தம் எதுவும் கிடையாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் கடல் நீர் தரைப் பிரதேசத்திற்குள் பிரவேசித்த காரணத்தினால் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சில தரப்பினர் பிரச்சாரம் செய்திருந்தனர். எனினும் இவ்வாறான எந்தவொரு ஆபத்து நிலைமைகளும் கிடையாது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Add Comment