உலகம்

இன மத முரண்பாடுகளை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்


இன மத முரண்பாடுகளை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன மத முரண்பாடுகளை தூண்டுவோரை காவல்துறையினரால் கைது செய்ய முடியாவிட்டால் அந்தப் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவுடனான தரப்புக்களே குழப்பங்களை விளைவித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பிரச்சினைகளின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது குறித்து ஏன் அம்பலப்படுத்த முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார். இன மத முரண்பாடுகளை தூண்டுவோருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply