இலங்கை

தேசிய இந்து அறநெறிக் கல்விவிழிப்புணர்வு வாரமும் கொடி தினமும் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு

தேசியஇந்துஅறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் மற்றும் இந்துசமய அறநெறிக்கல்வி கொடிதினம் மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் கிளிநொச்சி ஏ9  வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாவட்ட செயலகம் ஊடாக கிளிநொச்சி கிருஸ்ணர் கோவில்வரை பேரணியாக சென்று அனுஸ்டிக்கப் பட்டது.

இந்துகலாசாரஅலுவல்கள்திணைக்களத்தினால் இந்துசமயஅறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும்வகையில் ”அறநெறிக்கல்வியின ;முக்கியத்துவத்தை உணர்வீர்” என்ற தொனிப்பொருளில் தேசியரீதியில் அறநெறிக்கல்வி வாரம் சகலமாவட்டங்களிலும் அனுட்டிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இன்று கிளிநொச்சிமாவட்டத்திலும் மாவட்ட செயலக இந்துகலாச்சாரபிரிவினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு நடைபவனியில் மாவட்ட மற்றம் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள்,  அறநெறி ஆசிரியர்கள்,  ஆலயநிர்வாகத்தினர்கள் இந்துசமயபக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நடைபவனியினைத் தொடர்ந்து கிருஸ்ணர் ஆலயத்தில் கிளிநொச்சி மாவட்ட சின்மயாமிஸன் சுவாமிஜி அவர்களால் அறநெறிக்கல்விபற்றிய சிறப்புசொற்பொழிவும் இடம்பெற்றது.

இதேவேளை இக்கொடிவார சிறப்புநிகழ்வாக அரசஅதிபர்திருசுந்தரம் அருமைநாயகம் அவர்கள் நிதியினை வழங்கி கொடிவாரத்தை ஆரம்பித்துவைத்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.