
துருக்கியின் கிரீக் தீவுகளில் நள்ளிரவிலஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள கிரீக் தீவுகளின் லெஸ்போஸ், சியாஸ் மற்றும் ஏஜியன் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன எனவும் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.; 7 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த இளைஞர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ப்ளோமரியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Add Comment