முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் முச்சக்கர வண்டிகளினால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment