இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் சிறந்த துடுப்பாட்டக்காரருமான குமார் சங்ககார நூறு சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய சங்ககார தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியில் சரே அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்தநிலையில் நேற்றையதினம் ரோயல் லண்டன் கிண்ண தொடரில் யார்க்ஷைர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சங்ககார 121 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதன்மூலம் தனது கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்து சாதனைப் படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment