முல்லைத்தீவில் இருந்து துணுக்காய் வரை நடைபெறும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவையினை வெள்ளாங்குளம் ஊடாக மன்னார் வரை பணியில் ஈடுபடுத்துமாறு வெள்ளாங்குளம் இலுப்பைக்கடவை கள்ளியடி பள்ளமடு ஆண்டாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து பிற்பகலில் புறப்படும் பஸ் துணுக்காயில் இரவு தங்கி நிற்பதாகவும் துணுக்காயில் இரவு பஸ் தங்காது வெள்ளாங்குளம் ஊடாக மன்னார் வரை சேவையில் ஈடுபட்டு காலையில் மன்னாரில் இருந்து அதே வழித்தடத்தின் ஊடாக துணுக்காய் ஊடாக முல்லைத்தீவு வரை பயணிக்கின்றது.
இதன்மூலம் துணுக்காய், மாந்தை கிழக்கு ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்குப் பணிக்கு வருபவர்கள் இலகுவாகப் பயணிக்க முடியும் எனவும் தற்போது பணிக்கு வருபவர்கள் வவூனியா சென்றே மேற்படி இடங்களுக்குச் செல்ல வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
னவே குறித்த பஸ் சேவையினை துணுக்காய் ஊடாக மன்னார் வரை நடாத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Add Comment