Home இலங்கை விக்கினேஸ்வரன் சம்மந்தன் சந்திப்பு முற்றுப்பெறாத உடன்பாடுகள் நிச்சமற்ற தன்மையே தொடர்கிறது.

விக்கினேஸ்வரன் சம்மந்தன் சந்திப்பு முற்றுப்பெறாத உடன்பாடுகள் நிச்சமற்ற தன்மையே தொடர்கிறது.

by admin

வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு   வடக்கு வாழ் மக்களிடம் கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான சம்மந்தன் அவசரமாக முதலமைச்சருடன் உரையாடியுள்ளாh்
இவ்வுரையாடலின் போது சம்மந்தன்  சில முன்மொழிவுகளை வைத்து அதன் பிரகாரம் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டதாக10ம்  ஆனால் சிலவற்றை முதலமைச்சர் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இன்னும் நிச்சயமற்ற தன்மையே நிலவி வருகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது.

அதாவது அமைச்சர்களான ஜங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகியோர் அமைச்சு பதிவை இராஜினாமா செய்வது என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது என்றும்இ ஆனால் ஏனைய இரண்டு அமைச்சர்களையூம் கட்டாய விடுப்பு வழங்குவதனையூம் அவர்கள் மீது மேலதிக விசாரணை நடத்துவதனை தவிர்க்குமாறு அத்தோடு நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றுக்கொள்வதாகவூம் சம்மந்தன் விக்கினேஸ்வரனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் அதற்கு விக்கினேஸ்வரன்  மேலதிக விசாரணைகள்  இடம்பெறுவதனை நிறுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் ஆனால் அமைச்சர்களான சத்தியலிங்கம்இடெனீஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை  தீர்மானத்தை இரத்துச் செய்வதாகவூம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உடன்பாடுகள் முற்றுப்பெறாத நிலையில் மாவை சேனாதிராஜா உங்களுடன் தொடர்பு கொள்வார் என கூறி உரையாடலை  சம்மந்தன் முடித்துக்கொண்டதாக முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளாh்

எனவே தற்போது வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இன்னும் நிச்சயமற்ற தன்மையே தொடர்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

3 comments

Siva June 15, 2017 - 8:00 pm

வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் அநீதியானது என்பதைத் திரு. சம்பந்தன் அறியாதவரல்ல. இருந்தாலும், நல்லிணக்க அரசுடன் சேர்ந்து நாடகமாடும் அவருக்கு, முதலமைச்சரின் நடவடிக்கைகள் இடையூறாக இருப்பதை, அவர் எப்படி விரும்புவார்? முதல்வர் பதவியைப் பறிப்பதையே சிங்கள அரசியல்வாதிகளும், தமது அரசியல் நலனில் அக்கறைகொண்ட சில சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன.

முதல்வரின் நடவடிக்கைகளில் யாராலும் தவறு காண முடியாது! ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான குறித்த இரு அமைச்சர்களிடமும் தன்னிலை விளக்கம் கோரி, 7 நாள் கால அவகாசத்தை முதல்வர் வழங்கியிருந்தார்! அதை பயன்படுத்தாது திரு. ஐங்கரநேசன் அவையில் மூக்குச் சிந்துவதால் பயனில்லை? குற்றவாளியாக்கப்படுவதை அவர் விரும்பவில்லையாம்? இவர்களுக்குத் தாய்த் தமிழே புரியாதா? தமக்கெதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்தால் மட்டும் போதாது. அதை பொய்யென நிரூபிக்கவும் வேண்டும்! அன்றேல், குற்றச்சாட்டுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவியை இராஜினாமாச் செய்திருக்க வேண்டும்! அதைத்தானே முதலமைச்சர் கோரினார்! விசாரணைக் குழுவின் ஆலோசனைக்கமைய இவர்களைக் குற்றவாளிகளாக இனம்காட்டி முதல்வர் இவர்களிடமிருந்து பதவியைப் பறிக்கவில்லையே? அவரால் பதவிப் பறிப்பே செய்திருக்க முடியுமே?

திரு. சத்தியலிங்கம் மற்றும் திரு. டெனிஸ்வரன் விடயத்தில் முதல்வரின் தீர்மானம் குறித்துத் திரு. சம்பந்தன் என்ன தவறு காண்கின்றார்? குற்றச்சாட்டுக்குள்ளானவர்களைத் தொடர்ந்தும் பதவியில் இருத்துவது, விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக அமையும், என்ற சிறு விளக்கத்தைக் கூடத் திரு சம்பந்தன் அறியாரா? சட்டம் மற்றும் நீதித் துறைகளில் இதுபோன்ற முடிவுகள்தானே எடுக்கப்படுகின்றன?

முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் மாகாண சபை உறுப்பினர்கள், தாமாகவே தமது அரசியல் எதிர்காலத்துக்குச் சாவுமணி அடிக்கின்றார்கள், என்பதை மறுக்க முடியாது. முதல்வர் கூறியது போல், அப்பாவி மக்களும் கூட, ‘வெளுத்ததெல்லாம் பால்’, என்று சிந்தித்தமையாலேயே இவர் போன்றோர்களைத் தமது உறுப்பினர்களாகத் தெரிவு செய்தார்கள்? இதை, இனத்துக்கேயான சாபமென்று சொல்வதை விட, வேறென்னவென்று சொல்ல?

Reply
Siva June 15, 2017 - 10:04 pm

திரு. சம்மந்தன்- முதலமைச்சரிடையேயான அவசர உரையாடலினூடாக, திரு. சத்தியலிங்கம், திரு. டெனீஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை தீர்மானத்தை இரத்துச் செய்வதாக முதலமைச்சர் ஒப்புக்கொண்டபோதும், அதில் திருப்தியடையாத திரு. சம்பந்தன், இது குறித்துத் திரு. மாவை சேனாதிராஜா முதலமைச்சரைத் தொடர்புகொள்வாரெனக் கூறியுள்ளார்!

இன்று திரு. விக்னேஸ்வரனை ஓரம் கட்டக் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் திரு. சம்பந்தன், திரு. சுமந்திரன் மற்றும் திரு. சேனாதிராஜாவுக்கு, அன்று தேர்தல் மூலம் மாகாண சபைக் கட்டமைப்பைத் தம்வசமாக்கிக்கொள்ள மட்டும் அவர் தேவையாக இருந்துள்ளார்? முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெறுவோமென்ற நம்பிக்கை அன்று, திரு. மாவை சேனாதிராஜாவுக்கோ அன்றி TNA யில் அங்கம் வகித்த வேறு எவருக்குமோ இருந்திருக்கவில்லை, என்பதை இவர்களால் மறுக்க முடியுமா? கையாலாகாத திரு. மாவை சேனாதிராஜா, இன்று மட்டுமல்ல , முன்பும் சில தருணங்களில், திரு. சுமந்திரனோடு இணைந்து முதல்வருக்கு எதிரான, சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்? முதலமைச்சர் வேட்பாளராக திரு. மாவை சேனாதிராஜா போட்டியிட்டிருந்தால், சிங்களக் கட்சிகளின் பெரும்பான்மையுடன் மாகாண முதலமைச்சராக திரு. டக்ளஸ் தேவானந்தா இன்று பதவி வகித்திருப்பாரென்பதை யாராலும் மறுக்க முடியாது?

இன்று மாலை, ஐரோப்பிய ஊடகமொன்றுக்குப் பேட்டி வழங்கியிருந்த திரு. சுமந்திரன், தானும் திரு. சம்பந்தனும் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் திரு. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதாகக் கூறியிருந்தார். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம். எனினும், முதலமைச்சர் பதவிப் பறிப்பை நியாயப்படுத்தி அவர் கூறும் காரணம் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல! முதலமைச்சரான திரு. விக்னேஸ்வரன், பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பாடுபடவில்லை என்பதற்காகத், ‘திறமை வாய்ந்தவர்’, என்று இவர்களே கூறும் ஒருவரை ஓரம்கட்ட நினைப்பதை யாரும் ஏற்கப் போவதில்லை! மேலும், திரு. சுமந்திரனோ அன்றித் திரு மாவை சேனாதிராஜாவோ, தாம் ஏன் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட முன்வரவில்லை, என்பதை, அவர்கள் மறைக்க முயன்றாலும் மக்கள் உண்மை நிலையை நன்கு அறிவார்கள்!

திரு. C.V.K சிவஞானம் ஒரு மூத்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் என்பது மட்டுமே பலருக்குத் தெரியும்! ஆனால் அவர் ஒரு பெருத்த ஊழல் பேர்வழி என்பதை 70 களில் யாழ். மாநகர சபையில் கடமையாற்றிய பலரும் அறிவார்கள்! அன்று மாநகரசபை ஆணையாளராக இருந்த இவர் செய்த ஊழல்கள் ஒன்று இரண்டல்ல! இவர் கையில் முதல்வர் பதவி ஒப்படைக்கப்படுமானால், மாகாணசபையில் ஊழல் தலைவிரித்தாடும், என்பதை மறுக்க முடியாது.

எக் காரணத்துக்காகவும், ‘முதலமைச்சர் பதவி நீக்கப்படக்கூடாது, என்பதே மக்கள் பிரார்த்தனையாகும்! அதையும் மீறி, சுயநல அரசியல் செய்ய இம் மும்மூர்த்திகள் முயலுவார்களானால், தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் சூன்யமாகுமென்பது, சத்தியம்!

எங்கோ ஒரு மூலையில் ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திரு.விக்னேஸ்வரனைத் தாம் பதவிக்கு கொண்டுவந்தமையால், தம்மைப் போன்று சாக்கடை அரசியலைத் திரு. விக்னேஸ்வரனும் முன்னெடுக்க வேண்டுமெனத் திரு. சுமந்திரன் போன்றோர் எதிர்பார்ப்பது அவர்களின் முட்டாள் தனமேயன்றி, வேறென்ன?

Reply
ஆறுமுகம் June 19, 2017 - 2:02 pm

தந்தை செல்வா​விற்கு பின்னர் தமிழரசுக்கட்சி தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க இதயசுத்தியுடன் செயற்படவில்லை அமிர்தலிங்கம் முதல் சம்பந்தன் வரை நாற்காலி மோகம் கொண்டவர்கள். பின்னர் எப்படி இவர்களால் ஈழத்தமிழர்களுக்கு தலைவர்களாக முடியும். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தைரியமாக வெளிஉலகிற்கு கூறியவர்கள் மன்னார் ஆண்டகையும் திரு விக்னேஸ்வரன் அவர்களும் தான். சிறிலங்கா அரசுக்கு திரு.விக்கினேஸ்வரனை பதவியில் இருந்து விலக்க வேண்டிய தேவை உள்ளது அதனால் தான் தமிழரசுக்கட்சியை இதற்குப் பயன்படுத்துகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் கீழ் பணியாற்றிய நீதிபதியே சிறிலங்கா அரசின் இனப்படுகொலையை அம்பலப்படுத்தியது சிறிலங்கா அரசால் ஜீரணிக்க முடியவில்லை. தமிழரசுக்கட்சி இதற்குக் துணைபோகுமானால் அதன் அஸ்தமனம் மிக விரைவில் நடக்கும் . தமிழரசுக்கட்சி இன்றும் பழைய ஆதரவாளர்களின் தயவில் தான் உயிரோடு இருக்கிறது. இளைஞர்கள் இன்று அரசியலை நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.அடுத்து வரும் தேர்தலில் தமிழரசுக்கட்சி தமது கட்சியை தக்க வைத்துக் கொள்வதே பெரும்பாடுதான். அப்படி ஏதாவது நடந்தால் அதன் பொறுப்பை சம்பந்தன் மாவை சுமந்திரன் ஆகியோர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More