இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றச்சாட்டில் வேலூர் பெண்கள் சிறையில்; அடைக்கப்பட்டுள்ள நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
நளினி வேலூர் பெண்கள் சிறையிலும்; அவரது கணவர் முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் ஆண்கள் சிறையிலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 14ம்; திகதி தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என சிறை துறையிடம் மனு ஒன்று கொடுத்திருந்தார். இந்த மனு குறித்து சிறைத்துறை சார்பில் எந்த பதிலும், நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்து நேற்று மாலை முதல் நளினி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment