லண்டன் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை 24 மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருந்தது. இந்த தீ விபத்தில் நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக காணப்பட்டது.
இந்நிலையில், கட்டட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளதாக லண்டன் காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். மேலும், 24 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர்களில் 12 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த இரண்டு நாட்களாக தீ தொடர்ந்து எரிந்து வந்ததாகவும், தற்போது தான் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment