உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்க கடற்படைக் கப்பல் விபத்து- 7 கடற்படைவீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இன்று அதிகாலை ஜப்பான் கடலில் சரக்கு கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 கடற்படை வீரர்கள்  காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அத்துடன் காயம் அடைந்த கடற்படை அதிகாரி  உட்பட  2 பேர் உலங்குவானூர்தி மூலம்  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிட்ஸ் ஜெரால்ட் என்ற  அதி நவீன தொழில் நுட்ப வசதி கொண்ட போர்க்கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.  இந்தக்கப்பலில்  அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு கப்பலுடன் மோதியதில்  அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.