இலங்கை

வருடாந்தம் 5000 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை இழக்கின்றனர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வருடாந்தம் ஐயாயிரம் மாணவ மாணவியர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை இழந்து வருவதாக பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த 2010ம் அண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் ஆண்டு தோறும் ஐயாயிரம்  மாணவ மாணவியர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை இழந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடங்களுக்கான பட்டதாரிகள் உரிய முறையில் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. வெற்றிடங்கள் ஏற்படும் போது அதனை உரிய முறையில் நிரப்பாமையே இதற்கான காரணம் எனவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களின் பற்றாக்குறையினால் சில பாடசாலைகளில் விஞ்ஞான பிரிவுகள் மூடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply