குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜுலை மாதம் 3ம் திகதி திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்நோக்கும் வகையில் இந்தப் பிரச்சாரங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவைரயில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எவ்வித அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை. கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. எதிர்வரும் காலங்களில் தமது தலைமையின் கீழ் அரசாங்கமொன்றை அமைப்பதே மஹிந்தவின் திட்டமாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment