தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி வேலூர் சிறையில் 5 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட நளினி தனது போராட்டத்தினை கைவிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக நளினி வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வருகிறார். இந்தநிலையில் அவர் தன்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு கோரி விண்ணிப்பித்த மனுவினை விசாரிக்க கோரி கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டிருந்தார்.
சென்னை புழல் சிறைக்கு மாற்றினால், மகளின் திருமண ஏற்பாட்டினை கவனிக்க வசதியாக இருக்கும் என அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் நளினியிடம் சிறை கண்காணிப்பாளர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து நளினி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
Spread the love
Add Comment