இந்தியா பிரதான செய்திகள்

ஆர்கே நகர் பண விநியோகம்: எடப்பாடி. அமைச்சர்கள், தினகரன் மீது வழக்கு- தேர்தல் ஆணையம் உத்தரவு:-

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் ப, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை கடந்த ஏப்ரல் 12-ஆம் திகதி நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணிகள் சார்பில் தினகரனும், மதுசூதனனும் போட்டியிட்டனர். முன்னதாக இந்த தேர்தலுக்கு முன்னர் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் இரு அணிகளும் சுயேட்சை சின்னங்களில் போட்டியிட்டனர்.

இந்நிலையில் அந்த தேர்தலில் பணக் கொடுப்பனவுகளை தடுக்க தேர்தல் அதிகாரிகள் பறக்கும் படையை வைத்து கண்காணித்து வந்தனர். எனினும் பேருந்துகளிலும், விடுதிகளிலும் வைத்து பணம் விநியோகிக்கப்பட்டது.

அதேபோல் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்களும், வியாபார நிலையங்களுக்கான பொருட்கள் வாங்கும் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன. இந் செயற்பாடுகளைத் தொட்ந்து, தமிழகத சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடுகளில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது.


விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ரூ.89 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் பணம் விநியோகிப்பதற்காக அமைச்சர்கள் பணம் பெற்றுக் கொண்டு கையெழுத்திட்ட கோப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித் துறை முறைப்பாடு அளித்ததன் பேரில் ஆர்கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆளும் கட்சி மீது முறைப்பாடு அளித்தும் அபாலீஸார் முறைப்பாட்டைப் பெற்றுக் கொள்ளவில்லை.

 இதனால் இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழக்கறிஞர் வைரக்கண்ணன் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார். வைரக்கண்ணனுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர்கள் மீதும் …. அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜு உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யாப்படவில்லை. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வைரக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.