Home இலங்கை தமிழ் மாணவர்களுக்கு சிறந்த சேவை கல்விக்கான ஓட்ட குழு தெரிவிப்பு :-

தமிழ் மாணவர்களுக்கு சிறந்த சேவை கல்விக்கான ஓட்ட குழு தெரிவிப்பு :-

by admin

யாழ்ப்பாண இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் அனுசரணையுடன் 92 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கல்விக்கான ஓட்டம் (Race for Education) நிகழ்வினால் வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாண இளந்தலைமுறை மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் மேற்படி கல்விக்கான ஓட்டம் கடந்த ஜுலை 30 ஆம் திகதி லண்டன் ரொறன்ரோ மெல்பேரன் மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

வயது வந்தோருக்காக 5 கிலோமீற்றர் ஓட்டமும் சிறுவர்களுக்காக 2 கிலோமீற்றர் ஓட்டமும் ஒழுங்குசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் 500 பேர் வரை கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்விற்கு ஆதரவுக் கரம் கொடுத்துள்ள பெருமளவான நலன்விரும்பிகளும் சமூக ஆர்வலர்களும் சமூக சேவை நிறுவனங்களும் நண்பர்களும் தமது தாராள நன்கொடைகளையும் வழங்கியிருந்தனர் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைய முடியாமல் சவால்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் நோக்கில் கல்விக்கான ஓட்டம் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்விக்கான ஓட்ட ஏற்பாட்டுக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2016 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாண பிரதேசங்களில் உள்ள தரம் 9 மாணவர்கள் 8500 பேர் தவணைப் பரீட்சையில் 40 புள்ளிகளுக்கும் குறைவாகப் பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.

அதேநேரம் வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து கணித பாடத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இனங்காணப்பட்ட 8167 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்களின் பாரிய பெறுபேறாக 2016 ஆம் ஆண்டு 4163 மாணவர்கள் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளனர் என்றும் கல்விக்கான ஓட்ட ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கென 200 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இனங்காணப்பட்டு மாணவர்கள் 285 குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி கருத்தரங்குகள் வழங்கப்பட்டு மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களிலிருந்து திறைமையான பத்திற்கும் மேற்ப்பட்ட அனுபவமிக்க ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பட்டு அவர்களது வழிகாட்டலில் கணித பாடத்தில் குறைவான திறைமையுள்ளவர்களுக்காக பிரத்தியேகமாக இந்துவிழி பயிற்சி புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.

கல்விக்கான ஓட்டம் ஏற்பாட்டுக்குழுவினரின் நிதிப் பங்களிப்பில் பகுதி 1 மற்றும் பகுதி 2 என இரண்டு பிரிவுகளாக அச்சிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டல் பயிற்சி புத்தகங்கள் மத்திய மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் 2016 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் பத்தாயிரம் வரையான மணித்தியாலங்கள் பயிற்சி வகுப்புகள் ஒழுங்குசெய்யப்பட்டு மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

அத்துடன் கல்விக்கான ஓட்ட குழுவினரின் நிதிப்பங்களிப்பில் 7500 மாதிரி வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு கிழக்கு மாகாண மணவர்களுக்கு 4000 மாதிரி வினாத்தாள்களும் மத்திய மாகாண மாணவர்களுக்கு 3500 வினாத்தாள்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

மாணவர்களின் கணிதபாட திறன்விருத்தி ஆராய்வதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்பார்வைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தழிழ் இளந்தலைமுறையினரின் கல்வி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் கல்விக்கான ஓட்ட நிகழ்வை 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29 ஆம் திகதி வழக்கம்போன்று லண்டன் மெல்பேர்ன் ரொறொன்ரோ மற்றும் யாழ்ப்பாணத்தில் நடாத்த உள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் நன்கொடைகள் வெளிப்படையாகவும் (transparent) நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் பெற்றுக்கொள்ளப்பட்டு எல்லா செலவினங்களும் சர்வதேச தரம்வாய்ந்த கணக்காய்வு நிறுவனத்தினால் கணக்காய்விற்கு (audit) உள்ளாக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி ஏற்பாட்டுக்குழுவினரின் செயற்பாடுகள் மற்றும் ஏனைய தகவல்களை www.rfe.jhc92.com என் ற இணையத்தளம் ஊடாகப் பார்வையிடலாம். அவர்களது முகநூல் Race for Education by JHC Old Boys ஊடாகவும் புகைப்படங்கள் மற்றும் செயற்பாடுகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேலதிக தொடர்புகளை ஏற்படுத்த விரும் நலன்விரும்பிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் [email protected] என் ற மின்னஞ்சல் மூலமாக தொடர்களை ஏற்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ நிகழ்வு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More