இலங்கை

மஹிந்த இன்று பாகிஸ்தானுக்கு செல்கின்றார்


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளார். பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு அவர் இவ்வாறு பாகிஸ்தானுக்கு  செல்ல உள்ளார். ஒரு வார காலம் அவர் பாகிஸ்தானில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் மற்றும் அதனை வெற்றிகொண்ட விதம் தொடர்பில் நாளைய தினம் பல்கலைக்கழகத்தில் இரண்டரை மணித்தியாலங்கள் விசேட விரிவுரை ஒன்றை ஆற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஸவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்னாள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோரும் இந்த பாகிஸ்தான் பயணத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply