குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
மூன்று நாட்களில் கொழும்பு நகர குப்பைகளை அகற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரியவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாத நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் குப்பைகள் அகற்றப்படாவிட்டால் முதலமைச்சரை பணி நீக்க நேரிடும் என அறிவித்துள்ளார்.
அண்மையில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் மேல் மாகாண முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
Spread the love
Add Comment