குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குறைந்தபட்ச பஸ் கட்டணங்கள் 10 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆகக் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 10 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
பஸ் கட்டணங்களை 6.28 வீதமாக உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக்குறைந்த கட்டணத் தொகையான 9 ரூபா 10 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ்களுக்கு இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.
நீண்ட தூர பஸ்களுக்கான கட்டண உயர்வு பட்டியல் பின்னர் வெளியிடப்பட உள்ளது.
Spread the love
Add Comment